- °C
Are You a business owner?
List Your Business / AD
நடிகர் turned politician திரு. விஜய் சமீபத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். இதற்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த டிவிகே பிரச்சார அட்டவணையில், திரு. விஜய் டிசம்பர் மாதத்தில் நாமக்கலில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்திய மாற்றப்பட்ட அட்டவணையின்படி, அவர் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சாரம் நடத்த அனுமதி பெற த.வெ.க நிர்வாகிகள் மனு அளித்தனர், அதில் மூன்று இடங்களை பரிந்துரை செய்திருந்தனர். இதில், நாமக்கலில் உள்ள பொய்யேரிக்கரை மதுரைவீரன் கோயில் அருகே பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டது. ஆனால் அந்த சந்தியில் பிரச்சாரம் செய்ய போலீசார் அனுமதி மறுத்தனர். அவற்றுக்குப் பதிலாக, சேலம் சாலையில் உள்ள பழைய ஆர்.டி.ஓ அலுவலகம் அருகேயான இடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
செப்டம்பர் 25, 2025 (வியாழக்கிழமை) அன்று, த.வெ.க பொதுச்செயலாளர் திரு. என். ஆனந்த் நாமக்கல் வந்து பரிந்துரைக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று காவல் கண்காணிப்பாளர் திருமதி விமலாவை சந்தித்து, பிரச்சாரம் நடைபெறும் இடத்தை உறுதி செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. ஆனந்த், “இன்று காலை திரு. விஜய் சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.திரையரங்கம் அருகே பிரச்சாரம் மேற்கொள்வார்” என்று தெரிவித்தார்.
Copyrights © 2026 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.
