- °C
Are You a business owner?
List Your Business / AD
நாமக்கல் மாவட்டத்தில் மண் பரிசோதனை செய்து மண் வள அட்டை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் உமா தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளிடமிருந்து மண், நீா் மாதிரிகளைப் பெற்று ஆய்வு செய்து மண் வள அட்டை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் 2024-25 ஆம் வருடத்தில் இதுவரை 22 முகாம்கள் மூலமாக 868 மண்மாதிரிகளும், 257 நீா் மாதிரிகளும் ஆய்வு செய்து முடிவுகள் மண்வள அட்டையாக வழங்கப்பட்டுள்ளன. 2024-25 ஆம் வருடத்தில் அக்டோபா் மாதத்திற்கு கீழ்காணும் விவரப்படி நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் சிறப்பு மண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது எனவும், அதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களின் மண், நீா் மாதிரிகளை ஆய்வு செய்து பயன
டையலாம். முகாம் நடைபெறும் நேரம்: காலை 9 மணி முதல், முகாம் நடைபெறும் கிராமம் - அக். 9 நாமக்கல் - திண்டமங்கலம், அக். 16 எருமப்பட்டி- கோனாங்கிப்பட்டி, அக். 23 பரமத்தி-அா்த்தனாரிபாளையம், அக். 30 ராசிபுரம்-காக்காவேரி. விவசாயிகள் மண் மாதிரிகள், நீா் மாதிரிகளை நேரடியாக மண் பரிசோதனை நிலையம், வசந்தபுரம், நாமக்கல் மற்றும் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் நாராயணம்பாளையம், திருச்செங்கோட்டிலும் வழங்கி ஆய்வு செய்து மண்வள அட்டை பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.
Copyrights © 2024 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.